வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மர்ம நபர்கள் புகுந்து,
மாணவியரை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 590 மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியைச் சுற்றி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை 7.40 மணிக்கு இரண்டு மாணவிகள், பள்ளி வளாகத்தில் நின்றிருந்தனர்.
அப்போது, பின் பக்கவழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள், சுவர் ஏறி குதித்து, மாணவிகளை விரட்டியுள்ளனர். மற்ற மாணவிகளை கண்டதும், மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். கடந்த மாதம் இந்த பள்ளியை ஒட்டி அமைந்துள்ள அரசு கலைக் கல்லுாரி மாணவியர் விடுதிக்குள், நள்ளிரவில் மர்ம நபர் புகுந்து மாணவிகளை விரட்டியுள்ளான். இந்நிலையில் மீண்டும் பகல் நேரத்திலேயே, பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவிகளை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சனிடம் கேட்ட போது, "நடந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் புகுந்துள்ள சம்பவம் குறித்து, போலீசில் புகார் தெரிவிக்கப்படும். மாணவிகள் பாதுகாப்பு கருதி பள்ளியின் பின்புறம் உள்ள சிறிய கேட்டை மறைத்து, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்" என்றார்.
பெற்றோர் அதிர்ச்சி: வால்பாறை அரசு கலைக் கல்லுாரி மாணவியர் விடுதியில், கடந்த 27 ம் தேதி நள்ளிரவு புகுந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், தற்போது மீண்டும் பள்ளிக்குள் பகல் நேரத்தில் மர்மநபர்கள் புகுந்த சம்பவம், மாணவிகளையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது