மருத்துவ படிப்பு: மாணவர் சேர்க்கை, கட்டணம் நிர்ணயம் தொடர்பாக குழு அமைக்க மனு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண
நிர்ணயம் தொடர்பாக ஒரு குழுவை அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு: தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையின்போது மறைமுக பேரம் நடக்கிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.

கல்லூரிகள் சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் வேடிக்கையாக உள்ளது. மாணவர்களுக்கு கேள்வித் தாளையும், விடைத்தாளையும் அளித்து விடுகின்றனர்.
சில மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நன்கொடை பெற்றுக் கொண்டு இடங்களை அளிக்கின்றன. ஒரு இடத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்கின்றனர். தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கட்டண விகிதத்தை ஒழுங்குபடுத்த வேண்டியதுள்ளது.

நன்கொடை வசூலிப்பை தடுக்கவில்லை என்றால் தகுதி அடிப்படையில் தேர்வு பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். நடுத்தர, ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனி ஆகிவிடும். எனவே தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்கவும், கட்டணத்தை நிர்ணயிக்கவும் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் அளிக்க கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...