SSTA வின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு

SSTA சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 சென்ற புதன்கிழமை வந்தது.
நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்தவக்கீல் ஆஜராகி புதிய ஆசிரியர் பட்டியலையும் அந்த வழக்குடன் இணைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் . அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  நீதியரசர் புதிய பட்டியலையும் இணைத்து வழக்கை மீண்டும் திங்கள்(21.07.2014) அன்று கொண்டுவருமாறு உத்தரவிட்டார். ஆகவே இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் திங்கள் அன்று மீண்டும் வாதத்திற்கு வரலாம்  என்று நமது மூத்தவக்கீல் மாநில பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் அவர்களை  தொடர்பு கொண்டு தெரிவித்தார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...