ஆசிரியர்களின் கண்ணீர் துடைத்த SSTA ...... !

 SSTA  வின்  கோரிக்கையை ஏற்று 30.06.2014 மற்றும் 01.07.2014 ஆகிய இரண்டு நாட்கள் தொடக்கக்கல்வி துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இணையதள (ஆன் லைன் )வழியாக பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது.அக்கலந்தாய்வு மூலம் ஆயிரக்கணக்கான
ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் பெற்றனர். இந்த மாபெரும் வெற்றி  நம் இயக்கத்தின் கடின முயற்சிக்கு கிடைத்த பரிசு எனலாம். இருப்பினும் நமது வருத்தம்   வடமாவட்டங்களில் அதிக காலிப்பணியிடம் காட்டப்பட்டதாலும் தென்மாவட்டங்களில் காலிப்பணியிடம் குறைவாக காட்டப்பட்டதாலும் தென்மாவட்டத்தைச்  சேர்ந்த நமது ஆசிரியர்கள் பலருக்கு பணிமாறுதல் கிடைக்கவில்லை என்பதே ஆகும். இந்நிலை வரும் காலங்களில் போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நமது SSTA உறுப்பினர்கள் மற்றுமின்றி 2009 க்கு முன்னர் பணியில் சேர்ந்த பலரும் நம் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் நன்றியினை தெரிவித்து வருகிறார்கள்.   நமது உறுப்பினர்கள் சிலருக்கு இந்த மாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை நம் மாநில தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள். இணையதள ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் சிறு சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் கணினி இயக்குபவர்களின் தவறுகளாலும்   ஏற்பட்ட சில தவறுகளால் நமது ஒரு சில உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இயக்குனரின் மேலான கவனத்திற்கு நமது மாநில பொறுப்பாளர்கள் 07.07.2014 மற்றும் 21.07.2014 தேதிகளில் நேரடியாக எடுத்து சொன்னார்கள், பாதிக்கப்பட்ட  நமது 5 உறுப்பினர்களுக்கும் அவர்கள் மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்ய இருந்த மாவட்டங்களில் உள்ள   காலிப்பணியிடங்களிலேயே  மாறுதல் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.  இரண்டு ஆசிரியர்களுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கும்,  இரண்டு ஆசிரியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கோவை மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கும், தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஒருவருக்கும் எந்தவித செலவும் இல்லாமல் நமது  மாநில பொறுப்பாளர்கள் அவர்கள் தேர்வு செய்ய இருந்த மாவட்டங்களில் உள்ள இடங்களிலேயே மாறுதல் ஆணை பெற முயற்சி எடுத்தார்கள். அதன் பயனாக இன்று அவர்களுக்கு இயக்குனரின் உத்தரவின் பேரில் DEEO கள்  ஆணை வழங்கினர். இந்த ஆண்டும் சொந்த ஊருக்கு போக முடியாது என்றிருந்ததை "முடியும்"என்று சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித செலவும் இல்லாமல் முடித்த SSTA மாநில பொறுப்பாளர்களுக்கு பெண் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
இன்றும் என்றும் ஆசிரியர்களுக்காக SSTA  உறுதுணையாக இருக்கும்.   

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...