14,700 ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனக் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.30) தொடங்குகிறது.


தமிழகம் முழுவதும் 32 இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்.5) வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2,353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பிற ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு மையங்கள் வாயிலாக நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

கலந்தாய்வு அட்டவணை விவரம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  (மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்கள்)

- சனிக்கிழமை (ஆக.30)



முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்

(வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்) -ஞாயிற்றுக்கிழமை (ஆக.31)

இடைநிலை ஆசிரியர்கள்

(மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்கள்) -திங்கள்கிழமை (செப்.1)

இடைநிலை ஆசிரியர்கள்

(வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்)----- செவ்வாய்க்கிழமை (செப்.2)

பட்டதாரி ஆசிரியர்கள்

(மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்கள்) - புதன்கிழமை (செப்.3)

பட்டதாரி ஆசிரியர்கள்

(வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்) --வியாழக்கிழமை (செப்.4), வெள்ளிக்கிழமை (செப்.5)

தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தங்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில்தான் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள கலந்தாய்வு மையத்துக்கு கல்விச் சான்றிதழ்கள், தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் சென்று கலந்துகொள்ள வேண்டும்

கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்:

1. சென்னை - சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 160, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை.

2. காஞ்சிபுரம் - டாக்டர் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

3. திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...