முல்லை பெரியாறு அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடி வரையில், உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
முல்லை பெரியாறு
அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தியதற்காக, முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் இன்று மதுரையில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா உரையாற்றுகையில் இந்த உறுதியை அளித்துள்ளார்.
அவர் அந்த உரையில் கூறியதாவது:
"தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடியிலிருந்து தற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்து சென்னை மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
முல்ல பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கு முன்பும், பொதுப் பணித் துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுநர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி, தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தேன்.
தமிழக அரசின் சார்பில் அப்போது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும்; அணையினை பலப்படுத்தும் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளலாம் எனவும், இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசிற்கு கேரளா அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. மேலும், மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்தி அணையின் முழு நீர்தேக்க மட்டமான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என நிர்ணயம் செய்து ஒரு சட்டத் திருத்தத்தை கேரளா அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று கோரி 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட வாதம் என்ன என்பதை நீங்கள் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது.
தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று மக்களிடம் தி.மு.க கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர். இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதன் விளைவாக, 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சி அமைந்தது.
ஆனால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையில் திரு. கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசில் அப்போது தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அப்போதே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், இதை திரு. கருணாநிதி செய்தாரா? இல்லையே! அதற்கான அக்கறை கருணாநிதிக்கு இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். அதுவும் சிதறாத மனமாக இருக்க வேண்டும். அப்போது தான் அது ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து, அதிலிருந்து பலம் பிறக்கும். அந்தப் பலத்தின் மூலம் தான் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால், கருணாநிதியின் மனமோ சிதறிய மனம்.
நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், காவிரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனை, பாலாறு நதிநீர் பிரச்சனை ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து, அறிக்கைகளை வெளியிட்டதோடு, பல போராட்டங்களையும் நடத்தி, தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளை அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்க காரணமாக இருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் தான் என் மக்கள். அதனால் தான், உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முல்லை பெரியாறு அணையில் காலம் தாழ்த்தாமல், அதை என்னுடைய சொந்தப் பிரச்சனையாக கருதி நான் செயல்பட்டேன். நீங்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கினீர்கள். இது தான் வெற்றியின் ரகசியம். இந்த வெற்றி நமது வெற்றி.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடி வரையில், உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்