262 மாணவர்களுக்கு ரூ.6.65 கோடி கடன் வழங்க தீர்மானம்

: சிவகங்கையில் நடந்த கடன் வழங்கும் முகாமில், 262 மாணவர்களுக்கு, ரூ.6.65 கோடி கடன் வழங்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,
கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில், கடன் வழங்கும் முகாம் நடந்தது. காரைக்குடி ஐ.ஓ.பி., முதன்மை மண்டல மேலாளர் வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். முன்னோடி வங்கி மேலாளர் (பொறுப்பு) துரைச்சாமி வரவேற்றார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பங்காரு கிரி முன்னிலை வகித்தார். ஐ.ஓ.பி., முதுநிலை மேலாளர் வீராச்சாமி, வங்கி கடன் ஆலோசகர் கிருஷ்ணன் பங்கேற்றனர். ஐ.ஓ.பி., அலுவலர் அனந்தராமன் ஏற்பாட்டை செய்தார்.

கடன் வழங்கும் முகாமில், 30 வங்கிகள் பங்கேற்றன. இதில், கல்வி கடன் கேட்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடன் கேட்டு மனு செய்தனர். இதில், 262 மாணவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ. 6.65 கோடி வரை, கல்வி கடன் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...