தமிழகத்தில் 31 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக காலியாக உள்ளன என்று பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் நடத்த வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வும் காலதாமதமாகி வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 40 கல்லூரிகள்
கிரேடு-1 கல்லூரிகளாகும். மீதமுள்ள 41 கல்லூரிகளும் கிரேடு-2 கல்லூரிகள்.
இதில் கடந்த ஜூன் மாதம், 31 கிரேடு-2 கல்லூரிகளில் பணியாற்றிவந்த முதல்வர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கிரேடு-1 கல்லூரி முதல்வர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
இதன் காரணமாக 31 கிரேடு-2 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியானது. இந்தப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:
காலியாக உள்ள 31 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப, முதலில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் ஆட்சேபனைகள் வரவேற்கப்படவேண்டும். ஆனால், பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்படுவது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் பேராசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதோடு, முதல்வர் பணியிடங்களை நிரப்ப மேலும் சில மாதங்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாமதம் காரணமாக, ஜூலை மாதம் நடத்தப்பட வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு காலதாமதமாகி வருகிறது. இதனால், பணி மாறுதலுக்காகக் காத்திருக்கும் பேராசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்கக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, முதல்வர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவதோடு, பணிமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என்றார்.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...