நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில்
முன்னேற்றம் பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம் ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்அவர்.

2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப் பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே.சி.மணி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர் வி.மருதராஜ், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...