ஆவடியில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 3 மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் ஆவடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கே.சி வீரமணி பேசியதாவது:– ரூ.2,555 கோடி ஒதுக்கீடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நல்ல கல்வி அறிவை இளைய சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்காக அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். இவை அனைத்தையும் கொடுக்கும் அவர், தலைமை ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால், அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகளும் நல்ல நிலையில் வர வேண்டும். உயர் கல்விக்கு செல்லும் சூழலை உருவாக்க வேண்டும். இடை நிறுத்தம் குறைக்க வேண்டும் என்பது தான். கிட்டத்தட்ட 2,555 கோடி ரூபாய் கல்விக்காக முதல்–அமைச்சர் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக கட்டணமில்லா கல்வி, விலையில்லா மடிக்கணினி, புத்தகம், புத்தகப்பை, சீருடை, பஸ் பயண அட்டை, உயர்கல்விக்கு ஊக்கத்தொகை, என அனைத்தையும் விலையில்லாமல் கொடுத்து வருகிறார்கள். இந்த பொன்னான காலத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு முழுமையான கல்வி வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 100 சதவீத தேர்ச்சி கடந்த ஆண்டு 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல தேர்ச்சி விகிதத்தை மாணவ மாணவியர் பெற்றுள்ளனர். தொடர்ந்து வரும் கல்வியாண்டிலும் அதிக விழுக்காடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடை நிற்றல், கல்லாமையை இல்லாமையாக்குவதற்காக முதல்–அமைச்சர் தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளில் 71,708 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிட்டுள்ளார்கள். இதில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் அடங்குவர். இதில் கடந்த ஆண்டு முடியும் வரை 53,218 ஆசிரியர்களை நியமித்துள்ளது. இந்த ஆண்டு 1,367 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமித்து பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளார்கள். முதல்–அமைச்சரின் உயரிய இந்த திட்டத்தை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்பட்டு எதிர்வரும் ஆண்டுகளில் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் அனைத்து மாணவ,மாணவிகளும் பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும், புதிதாக 5 பகுதி நேர நூலகங்கள் திறப்பதற்கான ஆணைகளையும், சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார். கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை, இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி, ராகராஜ முருகன். கார்மேகம், இல்தர், ராஜேந்திரன், மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.