4 ஆண்டு இளநிலைப் படிப்பை வழங்க அனுமதி பெற்றது ஐ.ஐ.எஸ்சி.

பெங்களூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரசு கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(IISc), தான் வழங்கும் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்றுள்ளது.
IISc தரப்பில் இதுகுறித்து அனுப்பப்பட்ட விளக்கத்தை ஏற்று, இந்த அனுமதியை UGC வழங்கியுள்ளது. சமீபத்தில், 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகள் குறித்து நாட்டில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, IISc உள்ளிட்ட மூன்று கல்வி நிறுவனங்கள் வழங்கும் 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை நிறுத்தி வைக்குமாறு UGC கேட்டுக்கொண்டது. ஆனால், அப்படிப்பு குறித்து IISc தரப்பில் UGC -க்கு தெளிவான விளக்கம் அனுப்பப்பட்டது. இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, 3 ஆண்டுகள் முடிவிலேயே பட்டம் வழங்கப்பட்டுவிடும் என்றும், எஞ்சியுள்ள ஒரு ஆண்டு, ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக என்றும் விளக்கம் தரப்பட்டது. இதனையடுத்து, 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை, IISc தொடர்ந்து வழங்கிக் கொள்ளலாம் என்று UGC அனுமதியளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...