கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவம்: இழப்பீட்டை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன் தமிழக அரசு உத்தரவு


கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தில் இழப்பீட்டை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து
கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்க பள்ளி வளாகத்தில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை மாதம் 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளிக்குழந்தைகள் பலியானார்கள். பலர் தீக்காயம் அடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.

இந்த இழப்பீடு போதாது என்று கூறி மேலும் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பல தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட்டு 19–10–2012 மற்றும் 22–4–2014 ஆகிய தேதிகளில் சில உத்தரவுகளை கூறியிருந்தது.

நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன்
அதன் அடிப்படையில் தற்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயிக்க ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்த கமிஷன் நிறைவு செய்து 4 மாதத்திற்குள் அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று கூறி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...