பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்" என முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் பேசினார்.
சிவகங்கையில்,
அரசு, உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் தலைமை வகித்தார். சி.இ.ஓ., (அனைவருக்கும் கல்வி) வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவகங்கை நல்ல முகமது, தேவகோட்டை சவுந்திரராஜன் முன்னிலை வகித்தனர்.
சி.இ.ஓ.,செந்திவேல்முருகன் பேசுகையில், "பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், மாநில அளவில் சிவகங்கை 9 வது இடமும், பிளஸ் 2 தேர்ச்சியில், 11 வது இடத்தையும் பெற்றுள்ளது. இன்னும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபடவேண்டும். பள்ளிகளில், கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
புதிய கட்டடங்களை உருவாக்குதல், சேதமான கட்டடங்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும். அரசின், இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மாணவர்களை சென்று சேரவேண்டும்" என்றார்