விடுபட்டவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும், சிறப்பு முகாம் நேற்று துவங்கியது

இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்புபணி, விழுப்புரத்தில் நேற்று துவங்கியது.தமிழக அரசு தேர்வு வாரியம் கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய இடைநிலை ஆசிரியர் பணிக்கானதேர்வு
எழுதியவர்களின் சான்றிதழ்கள், ஏற்கனவே சரி பார்க்கப் பட்டது.
இதில், விடுபட்டவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும், சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரையில் நேற்று துவங்கி, 3 நாட்கள் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம் நடக்கிறது. விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நேற்று நடந்த முகாமை, தமிழக அரசு தேர்வு வாரிய இணை இயக்குனர் பூபதி நேரில் பார்வையிட்டார். விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் புருஷோத் தமன், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் சான்றிதழ் சரி பார்ப்பு பணியை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் நடந்த முகாமில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...