குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை சுருட்டிய உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் மற்றும் நலிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, 5 லட்சம் ரூபாயை சுருட்டிய, உதவி தொடக்க கல்வி அலுவலர்,
சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் பிறப்பித்தார்.

கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் நலிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ஊக்கதொகை வழங்கலில், பெருமளவிற்கு முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முறைகேடு: இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் உட்பட, பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதேபோன்று ஒரு சம்பவம், திருவாரூர் மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்தில் நடந்திருப்பது, தற்போது தெரியவந்துள்ளது. தொடக்க கல்வித்துறையின் கீழ், திருவெறும்பூர் ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றிய, முத்து கிருஷ்ணன், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 5 லட்சத்து, 1,650 ரூபாயை, முறைகேடு செய்ததை, தொடக்க கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன், முத்துகிருஷ்ணனை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலும், முறைகேடு நடந்துள்ளது.

அதிரடி நடவடிக்கை: ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் முறையாக நடக்கிறதா என்பதை கண்டறிய, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால், மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...