மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சஸ்பெண்ட்

சிவகாசி பள்ளியில், மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகாசியில் வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, மாலை வகுப்பில் எட்டாம்
வகுப்பு ஏ பிரிவு மாணவர்கள் வகுப்பு ஆசிரியை ஜெனதா முன்னிலையில், சத்தமாக பாட்டு பாடி உள்ளனர். அப்போது எட்டாம் வகுப்பு பி பிரிவு ஆசிரியர் இக்னேஷியஸ் 49, ஏ பிரிவிற்கு வந்து அதுகுறித்து மாணவர்களை கண்டித்து பிரம்பால் அடித்தார்.

அங்கு வந்த தலைமை ஆசிரியர் அருள்சூசையும், 54, மாணவர்களை ஸ்கேலால் அடித்து முழங்கால் போட வைத்துள்ளனர். இதில், மாணவர் காளிராஜிற்கு 12, இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர் புகாரில், விருதுநகர் கல்வி மாவட்ட அதிகாரி ராமச்சந்திரன் பள்ளிக்கு வந்து, 2 மணிநேரத்திற்கு மேலாக, 8ம் வகுப்பு  ஏ பிரிவு மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதுகுறித்து எழுதி வாங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் அடித்து, துன்புறுத்திய புகாரில், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.  இதனடிப்படையில் ஆசிரியர் இக்னேஷியஸ், தலைமை ஆசிரியர் அருள்சூசை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...