வங்கி களில். இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்காக ஓர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் தேசியமயமாக்கப்பட்ட 19 வங்கிகள்
உறுப்பினர்கள். இந்த அமைப்பு ஆண்டுதோறும் போட்டித் தேர்வு நடத்துகிறது
.
வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களிடம் சுரண்டி, இந்த அமைப்பு கோடிகளில் கொழிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வீழ்ச்சி ஏற்பட்ட, 2010-11, 11-12 ஆண்டுகளில் வங்கித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது.
அந்த ஆண்டுகளில் முறையே 1.32, 1.41 கோடிப் பேர் விண்ணப்பித்துள்ளனர். முறையே 85 லட்சமும், 97 லட்சமும் தேர்வு எழுதியுள்ளனர்.
2012-13இல் எழுத்தர் தேர்வுக்கு 12.90 லட்சம் பேர் விண்ணப்பித்து 8.68 லட்சம் பேரும், அலுவலர் தேர்வுக்கு 10.56 லட்சம் பேர் விண்ணப்பித்து 7.51 லட்சம் பேரும், சிறப்பு அதிகாரி தேர்வுக்கு 5.42 லட்சம் பேர் விண்ணப்பித்து 3.68 லட்சம் பேரும் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.
2013-14-இல் எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 14.24 லட்சமாக அதிகரித்து, தேர்வு எழுதியவர்கள் 9.97 லட்சமாகவும் மற்ற இரு தேர்வுகளுக்கும் சேர்த்து விண்ணப்பித்த 17.29 லட்சம் மாணவர்களில் 12.19 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இது அந்த அமைப்பின் இணையதளம் கொடுத்துள்ள கணக்கு.
சராசரியாகப் பார்த்தால், அனைத்து தேர்வுகளிலும் விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேர் தான் தேர்வெழுதியுள்ளனர். மீதி 35 சதவீதம் பேர் செலுத்திய கட்டணம் அப்படியே தேர்வு நடத்தும் நிறுவனத்துக்கு லாபமாகி விட்டது.
உதாரணமாக 2012-13 ஆம் ஆண்டில் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்திவிட்டு தேர்வு எழுதாதவர்கள் எண்ணிக்கை 9.04 லட்சம்.
ஒரு விண்ணப்பதாரர் ரூ.500 கட்டணம் செலுத்தியுள்ளதாகக் கணக்கிட்டால் கூட, கிடைத்துள்ள தொகை சுமார் ரூ.45 கோடி. ஒட்டுமொத்தமான தேர்வு நடைமுறைகளுக்குக் கூட இவ்வளவு செலவாகியிருக்குமா என்பது சந்தேகமே.
இது ஒருபுறம் இருக்க, தேர்வுக் கட்டணம் செலுத்தும்போது வசூலிக்கும் பரிமாற்றக் கட்டணம் மூலமும் வங்கிகள் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன.
ரொக்கப் பரிமாற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மின்னணு பணப் பரிமாற்றச் சேவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இணைய தளம் மூலம் ஒரு வங்கிக் கணக்கில் இருந்த மற்றொரு வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சம் வரை மாற்றுவதற்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கப்பட்டது.
இந்த சேவையை அதிகம் பேர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கட்டணத்தை ரூ.2.50 ஆக சில ஆண்டுகளுக்கு முன்பு குறைத்தது ரிசர்வ் வங்கி.
ஆனால், வங்கித் தேர்வுக்கு ரூ.600 கட்டணம் செலுத்த பரிமாற்றக் கட்டணமாக ரூ.25வரை வங்கிகளில் பெறப்படுகிறது. இணையதளக் கணக்கு மூலம் கட்டணம் செலுத்தினால், ரூ.14 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இந்தப் பரிமாற்றத்தில் செலுத்தப்படும் பணம் வங்கித் தேர்வு நடத்தும் அமைப்புக்குத்தான் செல்கிறது.
அதாவது இந்த பணத்தால் பலனடையப் போவது வங்கியின் ஓர் அமைப்புதான். பிறகு ஏன் வேலைக்காக விண்ணப்பிக்கும் அப்பாவியிடம் பரிமாற்றக் கட்டணம் வசூலிக்க வேண்டும்?
அப்படியே வசூலிப்பதென்றாலும் மின்னணு பரிமாற்றத்தில் ரூ.1 லட்சத்துக்கே ரூ.2.50 வசூலிக்கும்போது, ரூ.600க்கு ரூ.25 என்பது ஜீரணிக்கவே முடியாததல்லவா?
வங்கித் தேர்வு தான் என்றில்லை... உயர்கல்வி வாய்ப்புகள் பலவற்றிலும் இப்படித்தான் கட்டணக் கொள்ளை நடக்கிறது. ஒரு பல்கலைக்கழக கலந்தாய்வு விண்ணப்பத்தின் விலை ரூ.500. இதிலும் விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர்தான் கலந்தாய்வுக்கு வருகின்றனர்.
எனவே, கலந்தாய்வுக்கு ஒரு மாணவர் மீது அதிகபட்சம் ரூ.100க்கு மேல் பல்கலைக்கழகத்துக்கு செலவாக வாய்ப்பில்லை. மீதி ரூ.400 பல்கலைக்கழக நிதி நிலையை மேம்படுத்த உதவுகிறது.
இதில் ஓர் ஆறுதலான விஷயம் என்னவென்றால், மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் இரண்டுமே பல தேர்வுகளுக்கு ரூ.100-க்குள் தான் கட்டணம் வசூலிக்கின்றன.
சொல்லப்போனால், இவர்களுக்குத் தான் செலவு அதிகம். அதிகம் பேர் தேர்வெழுதுகின்றனர்.
வினாத்தாள் அச்சிடல், விடைத்தாள் மதிப்பீடு, தபால் செலவு என பல செலவுகள் உள்ளன. ஆனால், அவர்கள் நியாயமான கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
ஏழைகள் உயர்கல்விக்கும், உயர்நிலைக்கும் வளர வேண்டுமென்றால், தேர்வுகளுக்கான கட்டணம் குறைக்கப்பட வேண்டியது அவசியம்.