தமிழகத்தில் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க முடிவு

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பதவியை ஆண் அதிகாரிகளே வகித்து வந்த நிலையில், பெண்
அதிகாரிக்கு வாய்ப்பு தரப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியான பிரவீண்குமார், மாநிலத்தில் சட்டப்பேரவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவர் மீது பல்வேறு கட்சிகளும் விதவிதமான புகார்களைக் கூறினாலும், அவற்றை தேர்தல் ஆணையம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரின் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்தது.

அதேசமயம், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில், பல்வேறு கட்சிகளும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. ஆனாலும், தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடித்தார் பிரவீண்குமார். மக்களவைத் தேர்தலை நடத்தி முடித்த நிலையில், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளன.

விடுவிக்க விருப்பம்: பல்வேறு தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தாலும் எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாக நேரிட வேண்டிய சூழலில், தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விலகும் மனநிலையில் பிரவீண்குமார் இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனாலும், அவரை விடுவிக்கும் எண்ணத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இல்லை என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையும் அவரே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு இருக்கும் சூழலில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விலகி துறை ரீதியான பணிகளுக்குச் செல்ல பிரவீண் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்ற பேச்சு இப்போது தேர்தல் துறையில் பலமாக எழத் தொடங்கியுள்ளது.

ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பதிலாக, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வாய்ப்புத் தரப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இப்போது முதன்மைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்துஸ்து நிலையிலுள்ள இரண்டு அதிகாரிகளில் ஒருவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி மிகவும் முக்கியத்துவமிக்க அதேசமயம், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் அந்தப் பெண் அதிகாரிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க தயங்குவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், பிரவீண்குமாருக்கு மாற்று யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தயங்குகிறது தேர்தல் துறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...