பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்தில், உரிய ஊக்குவிப்பு இல்லாததால் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில்,"புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான, மாணவ, மாணவியர் தேர்வு, மாநிலம் முழுக்க நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் படி, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் அறிவியல் திறமைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு பள்ளிகளிலும், அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
அத்தகைய ஊக்கத் தொகை பெற்ற பள்ளிகளுக்கு இடையேயான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக இந்தாண்டு, மாணவ, மாணவியரின் அறிவியல் அறிவுத் திறமையை கண்டறியும் நோக்கில், வினாடி - வினா போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
ஊராட்சிப் பள்ளிகள் கலக்கல்: இந்த போட்டிகளில், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ, மாணவியரே 90 சதவீதம் பங்கேற்கின்றனர். நீலகிரி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பங்கேற்ற 97 பள்ளிகளில், 92 பள்ளிகள் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள்; நகராட்சி, அரசுப் பள்ளிகள் வெறும் 4 மட்டுமே. ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உள்ள ஆர்வம், பிற பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் இல்லாததே இதற்கு காரணம்.
இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகள் தோறும், அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரின் பட்டியலை சமர்பிக்குமாறு, "ஆன்- லைன்&' மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகங்கள், "ஆன்-லைன்&' மூலம், விபரங்களை சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர், மாநில, தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறுவர். ஆனால் நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் ஆர்வம் குறைவாக இருந்ததை பார்க்க முடிந்தது; அதற்கு காரணம், அப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததே.
ஆசிரியர்களின் ஆர்வமின்மையால், மாணவ, மாணவியரின் திறமை வீணடிக்கப்படுகிறது; இளம் விஞ்ஞானியாகும் வாய்ப்பு பறிபோகிறது. வரும் ஆண்டுகளில், அவர்கள் விழிப்புடன் இருந்து, அவரவர் பள்ளிகளில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்