மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்த ஈரோடு புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. இதற்கான நிறைவு விழா நேற்று மாலை சிறப்பாக நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே சண்முகம் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
சிபிசக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:-
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். 2-வது முறையாக இந்த புத்தக திருவிழாவில் நான் வந்து கலந்து கொண்டிருக்கிறேன். மக்கள் சிந்தனை பேரவை நடத்தும் இந்த 10-வது புத்தகத்திருவிழாவிலும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் ஈரோடு வரும்போதெல்லாம் என்னுள் 3 நினைவுகள் எழும். காவிரி ஆறு கல்லணைக்கு செல்லும் முன் ஈரோட்டைத்தொட்டு அதை வளப்படுத்தி செல்கிறது. அதன் பயனாக மஞ்சளும், கரும்பும் விளைந்து விவசாயிகள் வாழ்வை செழிக்கச்செய்யும் காட்சி. ஈரோட்டின் கரைகளை நனைத்தப்படி செல்லும் காட்சி. 3-வது காட்சி எனது தொழில்நுட்ப கல்வியில் நான் பயிற்சி பெற்ற நாகப்பட்டினத்தில் நான் சந்தித்து ஆசிபெற்ற சமூக விழிப்புணர்ச்சி சிற்பி ஈரோட்டின் வெண்தாடி வேந்தர் ஈ.வே.ரா.பெரியார் பிறந்த ஊர் இந்த ஊர் என்பதாகும்.
தினமும் படிக்கவேண்டும்...
மாவட்டங்கள் என்ற அளவில் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வரும் புத்தக திருவிழாவாக இது மாறி இருக்கிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களை சென்று அடைந்து இருக்கின்றன கடந்த 12 நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று இருக்கிறார்கள் ஈரோடு மக்கள் 15 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி ஒரு மணி நேரம் அமைதியாக புத்தகம் படித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். தினமும் படிக்க வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும் என்று நீங்கள் எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் புத்தகங்கள் எவ்வாறு எனது வாழ்வில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது எவ்வாறு அறிவார்ந்த எண்ணங்களை உருவாக்குகிறது அதனால் ஒரு சமுதாயம். ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதைப்பற்றி நாம் உணர வேண்டும் எனவே நண்பர்களே நற்புத்தகங்களே என் அரும்பெரும் ஆசிரியர்கள்.
மெய்ப்பொருள்
புத்தகம் வாங்குவதனால் வருவது அல்ல அறிவு. புத்தகங்களை படித்து அதன் மெய்ப்பொருள் கண்டு உணர்வதுதான் அறிவு. பிறரைப்பற்றி மட்டும் ஆராய்பவன் சாதாரண மனிதன். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான். ஒவ்வொருவரும் கல்விமானாக உயர முயல வேண்டும். சீனிவாச ராமானுஜன் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதை. அவர் இயற்கையாகவே கணிதத்தில் திறமை வாய்க்கப்பெற்று இருந்தார். அவரது 13-வது வயதில் எஸ்.எஸ்.லோனி எழுதிய அட்வான்ஸ் டெக்னாலஜி என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து தானே சூத்திரங்களும். அல்கிருதங்களும் படைத்தார். பள்ளியில் யாரும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தில் அரும்பெரும் வெற்றி அடைந்தார். அவரது வாழ்க்கையிலும் அவர் மாபெரும் வெற்றி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு பிடித்த கணிதத்தை அவர் மென்மேலும் ஆழமாக படித்தார். கணிதத்துக்காக அவர் உழைத்த உழைப்புதான் இந்த உலகத்துக்கு மாபெரும் கணித மேதையை கொடுத்தது எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக்கொள்வதுதான் உங்களை ஒருபடி மேலே உயர்த்தும். நண்பர்களே வெற்றியை கொண்டாட மறந்தாலும் தோல்வியை கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெற செய்பவை. நம்வாழ்வில் இன்றியமையாதவையாக இருக்கும் புத்தகங்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாதவையாக இருக்கிறது இதுநான் கண்ட உண்மை. புத்தகத்தின் பயன்கள் கணக்கிலடங்கா... தினமும் புத்தகங்களை படிப்பது இன்றியமையாதது தற்காலிக சந்தோஷங்களுக்கு தலைவணங்காது அபாரமான சாதனைகளை நிகழ்த்த விளைபவர்களால் தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அபரிமிதமானது? அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள். புத்தகங்களை படியுங்கள். நதிகளை இணைக்கவேண்டும்... நாட்டு மனிதர்கள் எவ்வாறு நல்வாழ்க்கையை நடத்துவது நாடு எவ்வாறு வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்வு இலக்கணத்தை வரையறுத்தார் உ.வே.சாமிநாதய்யர் ஓலையில் முடங்கி நாட்டுக்கு பயன்படாது கிடந்த இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை அச்சிட்டு அழகிய ஆராய்ச்சி பதிப்புகளாக வெளியிட்டு அழியாமல் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார் ஜியுபோப். மொழி நாடு நகரம் இதையெல்லாம் கடந்து விட்டு தமிழ் கவிதையின் சிறப்பில் மூழ்கி தமிழ் சமுதாயத்தின் அறிவாற்றல் மற்ற நாட்டு மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்று அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்தி அதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பாரதியார் ஆங்கிலேயர் ஆண்ட நாட்டில் 1910-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியை கொண்டாடுகிறார் 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பாரதியார் ஜூலை 10-ந்தேதி 2014 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பாரதியார் கண்ட கனவுக்கு ஓரளவில் அழுத்தம் கொடுப்பதாக நதிநீர் இணைப்புக்கு விளக்கமான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது ஒரு நல்ல செய்தி. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
வரவேற்பு
முன்னதாக அவர் மாலை 6.40 மணிக்கு விழா மைதானத்துக்கு வந்தார். அவருக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழாவில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுமதி. மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி. பொறியாளர் ஆறுமுகம் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி நாள் என்பதால் இரவு 11 மணிவரை புத்தக கண்காட்சி நடந்தது.