கொல்லிமலையிலுள்ள 3 உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடைய ஆசிரியைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர் கிழக்குவலவு, நத்துக்குழிப்பட்டி, சேலூர்நாடு ஆகிய 3 இடங்களில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு
வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் 1, சமூக அறிவியல் 1 என முழுநேர ஆசிரியைப் பணியிடங்கள் இரண்டு காலியாக உள்ளன. தவிர, பகுதிநேர உடல்கல்வி ஆசிரியைப் பணியிடங்கள் மூன்றும் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு முற்றிலும் தாற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியைகள் நியமிக்கப்பட உள்ளதால், தகுதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
முழுநேர ஆசிரியைப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் இளநிலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பதுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு ஒப்பந்த அடிப் படையில் மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். மேலும் விடுதிக் காப்பாளராகவும் செயல்பட்டால் மாதம் ரூ.25,000 ஊதியம் அளிக்கப்படும்.பகுதிநேர உடல்கல்வி ஆசிரியைகள் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம், பி.பி.எட் பட்டம் அல்லது சான்றிதழ் படிப்பு சிபிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.5,000 ஊதியம் வழங்கப்படும். தகுதியுடைய ஆசிரியைகள் தங்களது சுயவிவரப் படிவத்துடன் அனைத்துக் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களை இணைத்து செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...