உடனடியாக பணி வழங்க வேண்டும் !!!!சென்னை உயர் நீதி மன்றம்

மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றிய 13 ஆயிரம் பேருக்கும் தமிழக அரசு மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு
சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப்பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றிய 13 ஆயிரம் பேருக்கும் தமிழக அரசு மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர்கள் அனைவருக்கும் பணி வழங்காவிட்டால் ஏற்கனவே அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்தை பணி வழங்கும் வரை தமிழக அரசு தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...