உடுமலை அருகே அரசு துவக்கப் பள்ளியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, 17 குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில், கடந்த ஏப்ரலில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாக்
குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் கணக்கெடுப்பு நடத்தினர்.
அப்போது, விருகல்பட்டி புதூரில், பீகார் மாநிலத்திலிருந்து தினக்கூலி வேலைக்காக வந்திருக்கும், 60 குடும்பங்களில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குடும்பங்களிலுள்ள, 17 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜூன் முதல் அக்குழந்தைகள், விருகல்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தால், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இந்தி தெரிந்த ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. தற்போது, அக்குழந்தைகள் தமிழில் உள்ள உயிரெழுத்துகள், ஆங்கில எழுத்துகள், மற்றும் 1 முதல் 20 வரை உள்ள எண்கள் ஆகியவற்றை, பிழையில்லாமல் சொல்லவும், எழுதும் அளவிற்கு தயாராகியுள்ளனர். மேலும், தமிழ் மொழியில் சில வார்த்தைகளை சரளமாக பேசுகின்றனர்.
பள்ளி நிர்வாகி கூறியதாவது: பீகார் மாநிலத்தை சார்ந்த குழந்தைகள் பள்ளியிலுள்ள பிற மாணவர்களுடன் எளிதாக பழகுகின்றனர். தமிழ் மொழி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பாடம் நடத்துவதை எளிதில் புரிந்து கொள்கின்றனர். இக்குழந்தைகளுக்கு, வாகன வசதி யில்லாததால், ஒரு சில பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். எனவே, வாகன வசதி இருந்தால், குழந்தைகள் ஆர்வத்துடன் தொடர்ந்து பள்ளிக்கு வருவர். இவ்வாறு அவர் கூறினார்.,