மாணவர்கள் பழிவாங்கப்படுவதை தடுக்க ஆசிரியர் கல்வியியல் பல்கலை முற்றுகை

பல்கலைக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள பிரச்னையில் மாணவர்கள் பழிவாங்கப்படுவதை தடுக்கக் கோரி, குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பி.எட். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் கல்வியியல் பல்கலையை முற்றுகையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதி மானான் விளையில் ஜேம்ஸ் கல்வியியல்
கல்லூரி உள்ளது. இங்கு 2013, 14ல் பி.எட். படித்த 96 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 95 பேரும் 20 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்று தோல்வியடைந்தனர். மேலும் பல மாணவர்கள், தேர்வு எழுதிய நிலையிலும், அவர்கள் தேர்வே எழுதவில்லை என பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவர்கள் கடந்த 4ம் தேதி கல்லூரியை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், கல்வியியல் பல்கலை மற்றும் கல்லூரிக்கு இடையிலான பிரச்னையில் மாணவர்கள் பழிவாங்கப்பட்டதாகவும் பல்கலையில் பேசி பிரச்னைக்கு மூன்று நாட்களில் தீர்வு காண்பதாகவும் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தீர்வு காணப்படாததால் அக்கல்லூரி மாணவர்கள் நேற்று சென்னைக்கு வந்து கல்வியியல் பல்கலையை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் பல்கலைக்கழகத்தில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பல்கலை சார்பில் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீங்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்யுங்கள். நாங்கள் பரிசீலிக்கிறோம் என தெரிவித்தனர். தொடர்ந்து மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்துள்ளோம். மேலும் 18 மதிப்பெண்ணிற்கு கீழ் எடுத்தவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு எடுத்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களையும் பல்கலை தரப்பில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...