மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 9 மற்றும் 10ம் வகுப்பில் கணிதப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி, ஆகஸ்ட் 21 முதல் நடைபெறுகிறது.
அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுநகர் சுப்பையாநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவி.,கல்விமாவட்டத்தில் சிவகாசி, வெம்பகோட்டை ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்.,மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடக்கிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வழிகாட்டுதலில், நவீன கணித உபகரணங்களை பயன்படுத்தி அதன்மூலம் மாணவர்களுக்கு தரமாக கற்பிப்பது குறித்து, ஏற்கனவே மாநில அளவில் பயிற்சி பெற்றவர்கள் மூலம், பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 223 ஆசிரியர்கள் பங்கேற்பர்" என்றார்