திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில், முழுநேரம் பணியாற்ற வற்புறுத்துவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஓவியம், இசை, தையற்கல்வி மற்றும் உடற்கல்வி சார்ந்த பாடங்களை, சிறப்பு ஆசிரியர்கள் கற்பிக்க
வேண்டும். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 நாட்கள்அவர்கள், கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 543 பேர் பணியாற்றுகின்றனர். சில பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பள்ளிகளில் மருத்துவ காரணங்களுக்காக நீண்ட விடுப்பில், ஆசிரியர்கள் சென்றுவிடுவதால், மாதக்கணக்கில், அப்பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அங்கு மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி, "சிலபஸ்' முடிக்கின்றனர். போதிய ஆசிரியர் இல்லாத பட்சத்தில், பாடம் கற்பிப்பது தடைபடுகிறது.அவ்வாறான சில பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை, வகுப்பறையில் பாடம் நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்த முன்வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்களில் பலரும், அதை விரும்புவதில்லை. விருப்பமில்லாத ஆசிரியர்களை, பாடம் நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.உடற்கல்வி, தையல், ஓவியம், இசை போன்றவற்றில் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளது; அவர்கள் வகுப்பறையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சியோ, அனுபவமோ இல்லை. மாணவர்களுக்கு புரியும் விதமாக, அவர்களால் எளிதாக பாடம் கற்பிப்பதும் கடினம். பகுதிநேர பணிக்கு வரும் தங்களை, முழுநேர பணிசெய்ய வற்புறுத்துவதாக, சிறப்பு ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...