மூடுவிழா காணும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

புதுச்சேரியில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், பல பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்
ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் பயிற்சி பெறுவதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது.

இதனால், புதுச்சேரியில் புற்றீசல் போல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தோன்றின. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவக்க அனுமதி பெறுவதற்கான நடைமுறை, தமிழகத்தை விட, புதுச்சேரியில் எளிது என்பதால், தமிழகத்தை சேர்ந்த பலர் புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்கினர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் ஒன்று, தனியார் சார்பில் பல ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, உயர் கல்வி படிப்பதில் மாணவ மாணவியர் அதிக ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளனர். உயர் கல்விக்கான செலவையும் அரசே ஏற்றுக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. ஒவ்வொரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்க்க வேண்டும். போதிய மாணவர்கள் சேர்ந்தால்தான் ஆசிரியர், அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.

ஆனால் பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஒரு சில மாணவர்கள் கூட சேராததால், படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பல ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 5 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன. அதேபோல, அரசு நடத்தும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் மொத்தமுள்ள 100 இடங்களில் 92 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் கூறுகையில், "புதுச்சேரியில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால், தற்போது குறைவான பள்ளிகள்தான் இயங்கி வருகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு கிடைத்ததால், இந்த ஆண்டு பல பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு கல்விக் கட்டணமாக 1,000 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...