மூன்று மாநகராட்சிகளில் மேயர் பதவி, எட்டு நகர்மன்றங்களில் தலைவர் பதவி என காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேவையான மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதோடு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் மேயர் பதவியும், அரக்கோணம், கடலூர், விருத்தாசலம், குன்னூர், புதுக்கோட்டை, கொடைக்கானல், ராமநாதபுரம், சங்கரன்கோவில் ஆகிய நகர்மன்றங்களில் தலைவர் பதவியும் காலியாகவுள்ளன. மேலும், பல்வேறு ஊர்களில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளும் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வாக்குச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்துத் தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அரசியல் சார்பற்ற சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, கோவை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு, ஆயிரத்து 380 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 2 லட்சத்து 83 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இயந்திரங்களும், 3 லட்சத்து 64 ஆயிரத்து 788 வாக்காளர்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் 353 இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
வாக்குச் சாவடி சீட்டுகள்: வாக்குப் பதிவின் போது, இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையையே, சான்று ஆவணமாகப் பயன்படுத்தப்படும். இருப்பினும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதனால், இந்த இடைத்தேர்தலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இயந்திரங்களைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. போதுமான இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. கைவிரலில் அடையாளமிட மை, வாக்குச் சாவடி சீட்டுகள் உள்ளிட்டவை மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் உரிய இடங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.