அடுத்த கட்டம்இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல்

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை
தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம், வேதியல், தாவரவியல், வரலாறு, மைக்ரோ பயாலஜி ஆகிய 6 பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 1,326 பேர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து அவர்களின் பட்டியலை நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய 3 பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும். இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுனய்யார், உறுப்பினர் அறிவொளி ஆகியோர் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...