என்.சி.சி., ஜூனியர் பிரிவு மாணவர்கள் சொந்த செலவில் சீருடை, பூட்ஸ், பெல்ட் வாங்கும் நிலை உள்ளதால், ஏழை மாணவர்களுக்கு இது எட்டா கனியாக மாறும் நிலை உள்ளது. இந்நிலை நீடித்தால், என்.சி.சி.,யில் மாணவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பள்ளி
மாணவர்களுக்கு ஜூனியர் பிரிவு, மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சீனியர் பிரிவு என்.சி.சி., உள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல் போன்ற பண்புகள் சிறுவயதிலேயே கிடைக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மாறி, மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்கிறது. ஜூனியர் பிரிவில் பயிற்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சீனியர் பிரிவில் பயிற்சி பெற்று, ராணுவத்தில் நேரடியாக சேர வாய்ப்பு உள்ளது. என்.சி.சி., மாணவர்களுக்கு பூட், பெல்ட், தொப்பி, சீருடை இலவசமாக வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த பொருட்களை மீண்டும் அந்தந்த கல்வி நிறுவன என்.சி.சி., அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். அடுத்த கல்வி ஆண்டிற்கு மீண்டும் அதே அலுவலகத்தில் பெறும் முறை இருந்தது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு சீருடை, பெல்ட், பூட், தொப்பி வழங்கவில்லை. இவர்கள் தங்களது செலவில் இந்த பொருட்களை வாங்க வேண்டும். இதற்காக, 1,300 ரூபாய் முதல் 1,500 வரை செலவழிக்கும் நிலை உள்ளது. இதனாலே ஏழை மாணவர்கள் என்.சி.சி., யில் சேர யோசிக்கின்றனர். இந்நிலை நீடித்தால்,என்.சி.சி., மாணவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.