தேர்வு விதிமுறைகளுக்கு பிறகு UPSC முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுஇன்று நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 81,000 பேர் பங்கேற்கின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்,
ஐ.பி. எஸ், ஐ.ஆர்.எஸ், உள்ளிட்ட 24 உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வுக்காக ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை (145 மையம்), மதுரை (31 மையம்), கோவை (22 மையம்) ஆகிய 3 நகரங்களில் மொத்தம் 198 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை சுமார் 81, 052 பேர் எழுத உள்ளனர். சென்னையில் 61,003 பேரும், மதுரையில் 9704 பேரும், கோவையில் 10,345 பேரும் தேர்வு எழுதுகின்ற னர். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வை திறன் குறைபாடு கொண்ட 309 பேருக்காகதனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இன்று நடக்கும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு விதிமுறைகளில் சில சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள் ளது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பை யும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...