கடந்த ஆண்டில்" உச்ச நீதி மன்றத்தில் இன்று"(05.09.2013)


கடந்த ஆண்டில் இன்று (05.09.2013) தமிழகத்தில் அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டிருந்தனர் ;ஆனால் SSTA மாநில தலைமை மிகுந்த கனத்த

இருதயத்தோடு நமது தேசத்தின்  தலைநகர் டில்லியில் முகாம் (உச்ச நீதி மன்றத்தில் நடந்த மாவட்ட பணி மாறுதலுக்காக)இட்டிருந்தது.இவர்கள் ஆல் என்ன செய்ய முடியும் !!! என்று ஏளனமாக பேசிய பேச்சுக்களையும்,உச்ச நீதி மன்றத்தில் இவர்களால் துரும்பை ௯ட அசைக்க முடியாது என்று விட்ட சவால்களை தாங்கி கொண்டு நமது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் இருந்து வந்த எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளித்து கொண்டு ,வழக்கு முடியுமா அல்லது தள்ளி போகுமா???என்று பல வினாக்களோடு???என்று தீரும் இத்துன்பம் என்று,பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ,கணவன் /மனைவி /வயது முதிர்ந்த பெற்றோரை பிரிந்து கண்ணீரில் தத்தளித்த வந்த வேதனைகள் மாநில தலைமை வாட்டிவதைத்தது .வழக்கு விசாரணை பல கட்டத்தை தாண்டி இறுதி விசாரணைக்கு காலை 10.30மணிக்கு எட்டியது பின்னர் மீண்டும் மாலை 2.30 க்கு ஆரம்பித்து 3.10மணியளவில் 2009க்கு பின்னர் நியமனம் பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு "மாவட்ட பணி மாறுதல் வழங்கலாம்"என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று முதல் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தது SSTA .நமக்காக மட்டும் வாழ்வது சாதாரண வாழ்க்கை' இன்று இருந்து நாளை மறையும் "ஆனால் சில காலமாவது பிறர் நலன் கருதி வாழ்வது "வரலாறு ".இன்று சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாமல் இருக்கும் 2009க்கு பின் (தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் சேர்த்து )நியமனம் பெற்ற  பல ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட பணி மாறுதல் பெறுவது SSTA என்ற கண்ணீரில் உருவான இயக்கத்தினால் தான் என்று!!!!இதற்கு பெறும் உறுதுணையாக இருந்த மாநில பொறுப்பாளர்களுக்கும்,பிறர் வேதனையை தன் வேதனையாக கருதி சுகவீனத்திலும் பெரும் உதவி செய்த உயிர் நண்பர் மணிகண்டன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்,285 ஆசிரியர்களின் பங்களிப்பிற்க்கும்,இவற்றிக்கு மேலாக எடுத்த வழக்கை செவ்வனே செய்து முடித்த மூத்த வழக்கறிஞர் திரு.டி.கே.இராம மூர்த்தி ஐயா அவர்களுக்கும் திருமதி .சோபா மற்றும் அவர்களின் உதவி வழக்கறிஞர் திரு .ஆதி வெங்கட்ராமன் அவர்களுக்கும் "மனிதனால் செய்து முடிக்க முடியாத காரியத்தை தேவனால் செய்ய முடியும்" என்று உறுதுணையாக இருந்த "கடவுளுக்கும்"எங்களின் கண்ணீரை காணிக்கையாக்கின்றோம் ."நமது அடுத்த இலக்கு ஊதியம் ".அடுத்த ஆசிரியர் தினத்தில் அதன் வெற்றியை கொண்ட இறைவனை பிராத்திப்போம்!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...