மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்
போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், 4 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். எனினும் அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மெரினா காந்தி சிலை முன்பு நேற்று காலை கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டனர். தகவல் அறிந்து மெரினா போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...