கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 11 ஆயிரத்து 497 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தத் தேர்வு, நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
உதவி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை, 4 லட்சத்து 19 ஆயிரத்து 471 பேர் எழுதினர். அவர்களில், 11 ஆயிரத்து 497 பேர் முதன்மைத் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.