மாணவ, மாணவியருக்கு 3வது "செட்' சீருடைவழங்கல் பணிகள் துவங்கியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மூன்றாவது செட் சீருடை சப்ளை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தமிழகத்தில், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத்துக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலமாக, அரசின் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை ஆகியவை தயாரிக்க ஆர்டர் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு
வழங்கப்படும் சீருடைகள், கைத்தறியிலேயே தயாரிக்க முடியாது என்பதால், விசைத்தறி நெசவாளர் சங்கங்களிலும் சீருடை தயாரிக்கப்படுகிறது. அதில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில் இணைந்துள்ள, முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும், நான்கு செட் வீதம் வழங்கப்படுகிறது. மாணவருக்கு, மெரூன் கலர் பேண்ட், வெள்ளை கலர் சர்ட், மாணவியருக்கு, பாவாடை மெரூன் கலரிலும், சல்வர் கம்மீஸ் வெளிர் நிற பிரவுன் கலரிலும் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளாக, தலா நான்கு செட் சீருடை வழங்கப்படுவதால், விசைத்தறி நெசவாளர், துணி பதனிடும் தொழிலாளர் ஆகியோருக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் சீருடைகள், மாவட்ட சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் துறைகள் மூலமாக, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான சீருடைகள் வழங்குவதில், கடந்த ஜூன் மாதம் பள்ளி திறந்தது முதல், இரண்டு செட் சீருடை வழங்கப்பட்டது. காலாண்டு தேர்வு வரும் வாரத்தில் துவங்க உள்ள நிலையில், மூன்றாவது "செட்' துணியை வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தையல் பணியை விரைவாக முடித்துக் கொடுக்க சமூகநலத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை, 144 அரசு மற்றும் 16 அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும், ஒன்றாவது முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, 10 ஆயிரத்து, 301 மாணவர்கள், 11 ஆயிரத்து, 804 மாணவியர் என, 22 ஆயிரத்து, 105 பேருக்கு சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "காலாண்டு தேர்வு நடந்து முடிவதற்குள், சத்துணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும், வரும் ஒரு வாரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் சீருடைகள் சப்ளை செய்யப்படும். மற்ற குழந்தைகளுக்கு, அரசின் விதிமுறைப்படி சீருடை வழங்க முடியாது' என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். Email This

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...