ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மாணவர்களிடம் பண வசூல்

 பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, மாணவ, மாணவியரிடம் பணம் வசூலிப்பது, பெற்றோர் இடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 375 மாணவியர்; 342 மாணவர்கள் என, 717 பேர் பயின்று வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில், பயின்று வரும் மாணவ, மாணவியரிடம் 200 ரூபாயும்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயின்று வரும் மாணவ, மாணவியரிடம் 300 ரூபாயும் பள்ளி நிர்வாகம் வசூலித்து வருகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் பணம் வசூலிப்பது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கர் கூறும்போது, "10ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாடம் கற்றுதரும் பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்க பணத்தை வசூலிக்கிறோம்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...