அரசு பள்ளியின் அவலம்: குடிநீருக்காக குடங்களுடன் வீடு வீடாக சுற்றித்திரியும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குடிநீர் தரமாகவும், போதுமானதாகவும் இல்லாததால் மாணவர்கள் குடங்களுடன் வீடு வீடாகச் சென்று குடிநீர் பெற்று வருகின்றனர். ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், ஆந்திரப் பகுதிகளை சேர்ந்த காரூர்,
ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர், மீனவர், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள், அரசின் மதிய உணவுத் திட்டத்தில், பள்ளியிலேயே மதிய உணவு அருந்துபவர்கள். இந்நிலையில், இந்தப் பள்ளி மாணவர்கள் குடிப்பதற்கு தரமாகவும், போதுமானதாகவும் குடிநீர் வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. மேலும், அருகில் உள்ள மரங்களில் இருந்து விழும் இலைகள் போன்றவை இந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து அடிக்கடி நீர் மாசடைகிறது. எனவே, காலையில் பள்ளிக்கு வந்ததும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்கள் குடங்களை தூக்கிக்கொண்டு குழாய்கள் இருக்கும் பகுதிக்கு செல்வதும், அங்கு தண்ணீர் இல்லாதபட்சத்தில் வீடு வீடாகச் சென்று குடங்களுடன் தண்ணீர் கேட்டு பெறுவதுமாக உள்ளனர். எனவே, இந்த அவலநிலையைப் போக்கவும், தண்ணீருக்காக அவதிப்படும் இந்த மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டும், இப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட போதுமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...