பள்ளி காவலர்கள் நியமன விவகாரம்: அரசு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு தாக்கல் செய்த அறிக்கை மீது உயர்நீதமன்றம் அதிருப்தி தெரிவித்தது.



      உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புறவு ஊழியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி கணேசன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணைக்கு தாக்கல் செய்திருந்த ஆவணங்களிóல்

பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட சிலர் பரிந்துரை செய்திருப்பதாக ஒரு பட்டியல் இடம்பெற்றிருந்தது.

   இதனை பார்வையிட்ட நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் விசாரணை நடத்தி அறிóக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த 2013 செப்.17-ல் உத்தரவிட்டிருந்தார். இதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட 13 காவலர்களில் 6 பேருக்கும் 25 துப்புறவு ஊழியர்களில் 10 பேருக்கும் பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. எனினும், தகுதி அடிப்டையில் தான் தேர்வு நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டு  இருந்தார். இந்த அறிக்கையில், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட சிலர்  அளித்ததாக கூறப்படும் கடிதங்களைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்போதைய மாவட்ட கல்வி அதிகாரி சாந்தமூர்த்தியின் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அதில், பரிந்துரை அடிப்படையில் மட்டும் நியமிக்கவில்லை. தகுதி அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த அதிகாரி குறிப்பட்டுள்ளார். மாயன் என்பவர் உள்ளிóட்ட சிலருக்கு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் சிபாரிசு செய்யப்பட்டதாக கூறுவதற்கான ஆதாரம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பரிந்துரை அளித்ததாக கூறப்படும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகியோரிடம் விசாரிக்கவில்லை. தொலைபேசியில் சிபாரிசு செய்தவர் குறிóத்தும் முறையான விசாரணை நடத்தவில்லை என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்தஅரசு வழக்குரைஞர், அறிக்கை குறித்து தலைமைச்செயலரிடம் தெரிவிப்பதாக கூறினார்.   இதையடுத்து திங்கள்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...