சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர்
தானாகவே இழந்து விட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதகாரன் உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் பரப்பன அஹ்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தண்டனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் ஜாமீன் வழங்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.