சென்னை அரசு கல்லுாரிகளில் இருந்து, 11 மாணவியருக்கு, இலவசமாக பிரிட்டன் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின்
கற்கும் திறனையும், பேராசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்த, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும், சென்ற ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தை செய்துகொண்டன.
தகுதி என்ன?
அதன் அடிப்படையில், ஆண்டுக்கு, 25 மாணவர்களும், ஐந்து பேராசிரியர்களும், பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று, ஒரு பருவத்துக்கான கல்வியை பெற்று வருகின்றனர். அதற்காக, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஒவ்வொருவருக்கும், தலா, 15 லட்சம் ரூபாய் வழங்குகிறது. அந்த திட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, இளநிலை பட்டத்தில், 70 சதவீத மதிப்பெண்களும், பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமலும், இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில மொழியில் பேச்சு, எழுத்து, படிப்பு, புரிந்து கொள்ளல் என்ற நிலைகளையும், உளவியல், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றையும் சோதிக்கும், பல்வேறு தேர்வுகள் நடத்தப்படும். அவற்றில் தேர்வாகும் மாணவர்கள், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்.,தேர்விலும் தேர்வாக வேண்டும்.
அதேபோல், பேராசிரியர்களுக்கும், அவர்களுக்குரிய தகுதிகளை சோதிக்கும் தேர்வுகளை கடக்க வேண்டும். இந்த ஆண்டு, 241 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதி, இரண்டாம் நிலை தேர்வில், 85 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாம் நிலையில் 25 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்களில், 38 பேர் தேர்வெழுதி, இரண்டாம் நிலைக்கு, 21 பேராக குறைந்து, இறுதியாக ஐந்து பேர் தேர்வாகினர். இவர்களில் 11 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் சென்னையை சேர்ந்தவர்கள்.
அவர்கள் படிக்கும் துறை, கல்லுாரி, தேர்வாகியுள்ள பல்கலைகளின் விவரம் வருமாறு: சென்னை மாநில கல்லுாரியின், மணிக்கொடி, நிவேதா (விலங்கியல்) - ஷெபீல்டு ஹாலம் பல்கலை; காயிதே மில்லத் மகளிர் கல்லுாரியின் மகாலட்சுமி (விலங்கியல்) - ஷெபீல்டு ஹாலம் பல்கலை, அனுசுயா (கணினி பயன்பாட்டியல்) - சால்போர்டு பல்கலை, தேன்மொழி (தாவரவியல்) - நாட்டிங்ஹாம் பல்கலை; ராணி மேரி கல்லுாரியின் ஜெயஸ்ரீ (வேதியியல்) - ஷெபீல்டு ஹாலம் பல்கலை, சங்கரி (கணிதம்), மோகன பிரியா (கணிதம்) - லீட்ஸ் பல்கலை; பாரதி மகளிர் கல்லுாரியின் ஸ்வாதி (கணிதம்), மகாலட்சுமி (வேதியியல்) - லீசெஸ்டர் பல்கலை; வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லுாரியின் ரியாநாத் (வேதியியல்) - ஷெபீல்டு ஹாலம் பல்கலை ஆகியவற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
எப்போது செல்கின்றனர்?
மாநில கல்லுாரி, காயிதே மில்லத் கல்லுாரி மாணவியர் ஏற்கனவே, பிரிட்டன் சென்று விட்ட நிலையில், ராணி மேரி கல்லுாரி மாணவியர் 24ம் தேதியும் , பாரதி மகளிர் கல்லுாரி மாணவியர் வரும், 29ம் தேதியும் செல்ல உள்ளனர். இவர்களுடன், பாரதி மகளிர் கல்லுாரியின் வேதியியல் பேராசிரியர் ஸ்ரீதேவி, லீசெஸ்டர் பல்கலைக்கு வரும் 29ம் தேதி செல்ல உள்ளார்