சென்னை பல்கலை தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.சி.ஏ., எம்.எஸ்ஸி. (ஐடி), நூலக பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை
(செப்.12) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடுக்கு நிகழாண்டு மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு கட்டணமாக தேர்வுத் தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு விண்ணபிப்பவர்கள் www.ideunom.ac.in இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு செப்டம்பர் 19 கடைசித் தேதியாகும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...