சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னை பெண்களுக்கும் அதிகரித்து வருகிறது என சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் பாரி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் சந்திக்கும் நோயாளிகளில் 70 சதவீதம் பேர் சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்போடு உள்ளனர். 20 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது.
சிறுநீரகக் கற்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்குத்தான் அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால், இப்போது அந்த விகிதம் மாறியுள்ளது.
பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வெயிலில் அலைவது, அதிக நேரம் வாகனம் ஓட்டுதல் போன்ற பல காரணங்களால் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தட்பவெட்பம், தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உணவு முறை இவை மூன்றும்தான் இந்தப் பிரச்னையின் முக்கியக் காரணங்களாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். கீரை, தக்காளி, முந்திரிப் பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று பாரி தெரிவித்தார்.