ஆசிரியர் நியமனம் தடை நீக்கம் வெயிட்டேஜ் மார்க் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் 17 பேர் தனித்தனியாக மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ��ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் பணி நியமனங்கள் எதுவும் செய்யக்கூடாது. யாருக்காவது பணி நியமன ஆணை வழங்கியிருந்தால் அவர்கள் பணியில் சேரக்கூடாது,” என இடைக்காலத் தடை விதித்தார். தனி நீதிபதியின் இந்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரியும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரியும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகல்வித்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார். அவர், �வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் நடைமுறை சரியானதல்ல என்ற அடிப்படையில் தனி நீதிபதி நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். இந்த முறை சரியானது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்� என்றார். இதையடுத்து பள்ளிகல்வித் துறையின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக நீதி பதிகள் கூறினர். இதன்மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்காலத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...