தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் ஆணை

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்ட சனிக்கிழமை (செப்.27) முதல் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, வரும் 6-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக சேகவர் டிராபிக் ராமசாமி,
மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர்.

மனு விவரம்: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டனர். எனவே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும், அதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பொது மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுக்களில்கோரப்பட்டது.

இந்த மனுக்குள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு ஞாயிற்றுக்கிழமை (செப்.28) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, சில இடங்களில் போராட்டங்கள் மட்டும்தான் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பஸ்ஸþக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேரும், தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதற்காக ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

மேலும், தமிழக தலைமைச் செயலர், டிஜிபி இடையே ஏற்கெனவே கூட்டம் நடத்தப்பட்டு, சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 38 கம்பெனிகளைச் சேர்ந்த போலீஸார் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் போலீஸாருக்கு உதவுவதற்காக ஒரு ஐ.ஜி. மற்றும் நான்கு எஸ்.பி.க்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

போராட்டங்களைத் தவிர எங்கேயும் வன்முறைகள் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தின் சட்ட - ஒழுங்கு நிலைமை குறித்த நிலை அறிக்கையை அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...