முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியல்

அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு
உள்ளது.


இதுகுறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், 'அபாயின்மென்ட் கமிட்டி ஆப் கேபினட்' எனப்படும், ஏ.சி.சி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில், மெரிட் அடிப்படையிலான பட்டியல் பரிந்துரைக்கப்படாதது, தெரிய வந்துள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகளின் இணைச் செயலர், வாரியத் தலைவர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியலை அனுப்புமாறு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...