தமிழக அரசுப் பெண்கள் பள்ளிகளில் ஓராண்டுக்குள் கழிப்பறை வசதி: கோட்டையில் வெங்கய்ய நாயுடு

தமிழகத்தில் ஓராண்டுக்குள் அனைத்து அரசுப் பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்படும்’’ என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்த பிறகு நிருபர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி முதல்வருடன் விவாதித்தேன். இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வரும் மழைநீர் சேகரிப்பு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவைப் பற்றியும் விவாதித்தோம். இதர மாநிலங்களைவிட குடிநீர் வரி வசூலிப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் பெண்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனினும் ஓராண்டுக்குள் அனைத்து அரசுப் பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு உதவும். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும். இத்திட் டத்துக்குத் தனியாரிடம் இருந்து நிதி வசூலிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு எடுத்துரைத்தேன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...