தனித்தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய கடைசி வாய்ப்புசெப்டம்பர்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பித்து, இதுவரை ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, தேர்வுத்துறை, கடைசி வாய்ப்பை
அளித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட், ஆகஸ்ட் 25ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் செப்., 2ம் தேதியில் இருந்தும், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.

இதுவரை, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவ, மாணவியர், உடனடியாக தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இல்லை எனில், தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...