பள்ளிகளில் அலட்சியப்படுத்தப்படும் சுற்றுச்சூழல் கல்வி

 மாணவர்கள் மத்தியில் சூழல் அறிவை ஏற்படுத்துவதற்காக, துவங்கப்பட்ட சுற்றுச்சூழல் கல்வி பாடத்திட்டத்திற்கு, இரு ஆண்டுகளாக புத்தகங்கள் விநியோகிக்காமலும், வகுப்பு நேரம் ஒதுக்காமலும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.


பள்ளிகளில், முக்கிய பாடங்களை தவிர, மாணவர்களது அறிவுத்திறனை மேம்படுத்த, துணை வகுப்புகள் நடப்பது வழக்கம். குறிப்பாக, விளையாட்டு, இசை, ஓவியம், தையல், கணினி வகுப்புகளை போன்று, சுற்றுச்சூழல் கல்விக்கும் பாடத்திட்டங்கள் உள்ளன. இது, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. துணை வகுப்புகளுக்கு, பாடத்திட்டங்கள் இருப்பதை போல, வாரந்தோறும் வகுப்புகளும், கால அட்டவணையில் இடம்பெறுவது வழக்கம். இருப்பினும், கடந்த இரு ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் கல்விக்கு மட்டும், புத்தகங்களோ, வகுப்பு நேரமோ ஒதுக்கப்படவில்லை.

தோட்ட பராமரிப்பு, வளாக துாய்மை என, பள்ளி முடிந்த பிறகு, செய்முறை பயிற்சியாக மட்டுமே, சுற்றுச்சூழல் கல்வி வழங்கப்படுகிறது. இதை கண்காணிக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் வகுப்பாசிரியர்களும் மாணவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால், பல பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்விக்கான செயல்பாடுகள் சம்பிரதாய நிகழ்வாகவே இருக்கிறது. எவ்வித வகுப்புகளோ, செய்முறை பயிற்சியோ இல்லாமல், ஆண்டு இறுதியில், தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு, 2011ல் அச்சிடப்பட்ட புத்தகங்களில் இருந்தே வினாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டு இறுதியில், மாணவர்களை குழுக்களாக பிரித்து, தேர்வுக்கான கேள்விகளையும் கொடுத்து, படிக்க வைத்து தேர்வு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், சூழல் கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் எழ வாய்ப்பில்லை என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், "பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வாயிலாகவே, அனைத்து கருத்துகளையும் திணிப்பதை விட, துணை வகுப்புகள் வாயிலாகவும், சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இதுபோன்ற பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு, புத்தகங்கள் கூட விநியோகிக்காமல் இருப்பது, பல தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள், சூழல் கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதையே காட்டுகிறது. மாணவர்களுக்கு எவ்வித சூழல் அறிவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, "துணை வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படாதது குறித்து, பள்ளிகளில் இருந்து எவ்வித புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தி, உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...