இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு
மேல் மார்க் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக வெயிட்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனமும் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்பட 73 பேர் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும்’’ என்று கூறினார்கள். மேலும், ‘‘73 பேர் தொடர்ந்த மனுமீதான விசாரணை வரும் 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றும் தெரிவித்தனர்.