உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான அவரது முழுப்பெயர் ஹண்டியாலா லட்சுமிநாராயணசுவாமி தத்துவாகும்.
www.sstaweb.com

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தத்துவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போதைய தலைமை நீதிபதியான ஆர்.எம்.லோதா, இம்மாதம் 27ஆம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தத்து புதிய தலைமை நீதிபதியாக வரும் 28ஆம் தேதி பொறுப்பெற்க உள்ளார். தற்போது நீதிபதி லோதாவுக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தத்து(63), 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கி விசாரித்து வருகிறார். அவர் தலைமை நீதிபதி பதவியை 14 மாதங்கள் வகிப்பார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2015), டிசம்பர் 2ஆம் தேதி நிறைவடையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...